Thursday 30 September 2010

சொத்து! - குமுதம் (6-10-2010) இதழில் வெளிவந்தது

சொத்து!

"என்னங்கையா கெட்டுப்போன வெங்காயமா எடுத்து இருக்கீங்க?'' என்று கேட்டான் கடைக்காரன்.

"வீட்டுல டி.வி. பார்த்துகிட்டு இருந்த என்னை என் மனைவி வெங்காயம் வாங்க அனுப்பிட்டா. அதான் கெட்டுப்போன வெங்காயத்தை வாங்கிட்டு போனா அடுத்த முறை கடைக்கு அனுப்பமாட்டால்ல'' என்று சொன்னான் ராமு.

"அய்யா, கெட்டுப்போனதை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தான் போடுவாங்க. நீங்க வாங்கிட்டு போற வெங்காயத்தை நீங்கள் மட்டுமில்லை உங்கள் குழந்தைகளும் சாப்பிடுவாங்க. நம்ம குழந்தைகளுக்கு நாம கொடுக்கின்ற சொத்தே ஆரோக்கியம் தான்'' என்று சொன்னான் கடைக்காரன்.

ராமுக்கு முகத்தில் 'பளார்' என்று அறைந்தார் போல இருந்தது கடைக்காரன் கூறியதை கேட்டதும்.  வெங்காயம் விற்கும் கடைக்காரனுக்கு இருக்கும் அறிவு கூட, நமக்கு இல்லையே என்று,  கெட்டுப்போன வெங்காயத்தை கொட்டிவிட்டு, நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றான்...




2 comments:

  1. ஏ! அப்பாடி ! குமுதத்தில் இனி நல்ல வெங்காயங்கள் கிடைக்கும் என்று நம்புவோமாக ! நமது குழந்தைகளுக்காகவாவது, தயைசெய்து குமுதம் வள்ளல் அழகப்பர் சிரிக்க நடந்து கொண்டால் சரி !

    ReplyDelete
  2. நன்றி தமிழன் அவர்களே உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

    ReplyDelete