Wednesday, 17 November 2010

மரியாதை - குமுதம் (24-11-2010) இதழில் வெளிவந்தது

மரியாதை !

   "என்னடா சோமு, எல்லோரும் உனக்கு வணக்கம் சொல்லுறாங்க, நீயோ! உனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு தேடி போய் வணக்கம் சொல்லுற, அவர் சங்கடமா நெளியுறார்." என்றான் ராமு.

   "அவர் அனுபவம் என்னுடைய வயது. 30 வருடமா இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்." என்றான் சோமு.

   "அதனால என்ன?" என்றான் ராமு.

   "இந்த நிறுவனம் ஒரு கட்டிடம் மாதிரி, அவரை போன்ற மூத்த ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் கடின உழைப்பையும் பல தியாகங்களையும் செய்ததின் பலனாகதான் நற்பெயர், புகழ், பல கிளைகள் என இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போன்றவர்கள். அவர்களை விட முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் போல் மற்றவர்களுக்கு எங்களைப் பார்த்தால் தோன்றும், ஆனால் நாங்களோ 2வது தளம், 3வது தளம் போன்றவர்கள், அவர்களுக்கு உதவி செய்யவே நாங்கள்.

   அவருக்கு தெரிந்த விசயங்களில் 10 சதவீதம் கூட எனக்கு தெரியாது, தெரிந்த மாதிரி காட்டிக் கொள்வேன். தேடி போய் வணக்கம் சொல்வது அவரின் அனுபவத்திற்குதான்.என்றான் சோமு.


  “சின்ன வயதில், பெரிய பதவியில் இருப்பதன் அர்த்தம் இப்ப புரியுதுஎன்றான் ராமு.




Thursday, 30 September 2010

சொத்து! - குமுதம் (6-10-2010) இதழில் வெளிவந்தது

சொத்து!

   "என்னங்கையா கெட்டுப்போன வெங்காயமா எடுத்து இருக்கீங்க?'' என்று கேட்டான் கடைக்காரன்.

   "வீட்டுல டி.வி. பார்த்துகிட்டு இருந்த என்னை என் மனைவி வெங்காயம் வாங்க அனுப்பிட்டா. அதான் கெட்டுப்போன வெங்காயத்தை வாங்கிட்டு போனா அடுத்த முறை கடைக்கு அனுப்பமாட்டால்ல'' என்று சொன்னான் ராமு.

   "அய்யா, கெட்டுப்போனதை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தான் போடுவாங்க. நீங்க வாங்கிட்டு போற வெங்காயத்தை நீங்கள் மட்டுமில்லை உங்கள் குழந்தைகளும் சாப்பிடுவாங்க. நம்ம குழந்தைகளுக்கு நாம கொடுக்கின்ற சொத்தே ஆரோக்கியம் தான்'' என்று சொன்னான் கடைக்காரன்.


   ராமுக்கு முகத்தில் 'பளார்' என்று அறைந்தார் போல இருந்தது கடைக்காரன் கூறியதை கேட்டதும்.  வெங்காயம் விற்கும் கடைக்காரனுக்கு இருக்கும் அறிவு கூட, நமக்கு இல்லையே என்றுகெட்டுப்போன வெங்காயத்தை கொட்டிவிட்டு, நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றான்...