Tuesday 23 October 2012

அனுபவம்! - குமுதம் (31-10-2012) இதழில் வெளிவந்தது

அனுபவம்!

“ரமேஷ் அந்த ஸ்பானரை எடுடா”

“ரமேஷ் தண்ணீர் கொண்டு வா”

“அந்த பர்னரை எடுத்துட்டு வா சீக்கிரம்”

“ரமேஷ் இங்கே வந்து கதவை திற” என்று முதலாளி முரளி முதல் மற்ற அனைவரும் ஆளுக்கு ஆள் ரமேஷை விரட்டியபடி வேலை வாங்கினார்கள். ரமேஷும் முகம் சுளிக்காமல் வேலைகளை மின்னல் வேகத்தில் செய்து முடித்தான்.

ஓரு வருடம் முடிந்ததும் வாகனங்களின் அனைத்து வேலைகளையும் நன்றாக கற்றுக் கொண்ட பின், முரளி, துளசியிடம் விடைபெற்றுச் சென்றான். சில வாரங்கள் கழித்து, முரளியின் வீட்டு வாசலில், பெரிய கார் வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய ரமேஷ். கையில் தட்டுடன் வந்து முரளி, துளசியிடம் கொடுத்து விட்டு, கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். துளசி தட்டை வாங்க, அதில் கண்ணை பறித்தது, சிகப்பு வண்ணப் பட்டுப்புடவை. அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் நின்றனர்.

“இரண்டு பேரும் என்னை மன்னியுங்கள். நான் யார் என்று சொல்லாமல் வேலைக்குச் சேர்ந்ததால்தான் அனைத்து வேலைகளையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடிந்தது. எந்த ஒரு அனுபவமும் இல்லாமல், ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களை வழிநடத்த முடியுது.” என்றான் ரமேஷ்.

“அப்ப, நீ... நீ... நீங்க யார்?” என்று கேட்டான் முரளி.

“விஸிடா கார் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்று 10 நாட்கள் ஆகிறது,” என்றான் ரமேஷ்.




1 comment:

  1. அன்புள்ள திரு கமலக்கண்ணன்,
    எனது தளத்திற்கு வந்து கருத்துரை இட்டதற்கு நன்றி.

    உங்கள் தளத்தில் இருக்கும் எல்லாக் கதைகளும் பிரபல பத்திரிகையில் வந்தவை என்று தெரிகிறது.

    உங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    கதைகளை விட அவை சுவாரஸ்யமாக இருக்கும்.

    அன்புடன்
    ரஞ்ஜனி

    ReplyDelete